பிரிவு...  (எனது பார்வையில்)

விலகும் வரை தெரியாத
வினோத உணர்வு .......

பழகிய நாட்களை நினைவூட்டும்
ஞாபக அறிவு ...

சொல்லி விலகியவர்கள்
சொல்லாத வலி இந்த பிரிவு ......

சொல்லாமல்விலகியவர்களின்
கதறல் மொழி இந்த பிரிவு ......

மனதின் விலா எலும்பு முறிவு
ஈடு செய்ய முடியா இந்த பிரிவு ......

சிலரின் பிரிவு
அன்னையின்முடிவில்......

சிலரின் பிரிவு
காதல் வலியில்........

சிலரின் பிரிவு
நட்பு முறிவில் .......

பிரிவு.....இங்கே
வகைபடுத்தப்படுகிறது .......

வலிகளுக்குதகுந்தவாறும் .......
கண்ணீர் துளிகளுக்கு உகந்தவாறும் .......


உடன் இருந்தவர்களின் அருமையை
அறிய உதவும் பரிசு இந்த பிரிவு .......

நேசத்தை வலுப்படுத்த
காத்திருக்க சொல்லும் வாய்ப்பு இந்த பிரிவு ......

அன்பை புரிந்துகொள்ள துடிக்கும்
ஆழ்மனத்தவிப்பு இந்தப் பிரிவு ........


பிரிவுகளைஏற்றுக்கொள்ளுங்கள் .......
உங்களின்நேசமிக்கவர்களிடம்

நீங்கள் வைத்துள்ள பாசத்தை
தெரிந்துகொள்ள ...........


பிரிவுகளைநிரந்திரமாக்கிவிடாதீர்கள் .....
உங்களின்அன்பு மிக்கவர்களை விட்டு

உங்களால்வாழ முடியாது என்பதை
அவர்கள் உணர்ந்து கொள்ள ........

லண்டனில் இருந்து சிறீ.

நான் படித்துச் சுவைத்தவை...

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே!
மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!

முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!

இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்ததை முடிக்கும் வரை ...

லண்டனில் இருந்து சிறீ.

 

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?

 அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?
*
ஏங்க எங்கே போறீங்க?
*
யார்கூட போறீங்க?
*
ஏன் போறீங்க?
*
எப்படி போறீங்க?
*
என்ன கண்டுபிடிக்க போறீங்க?
*
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
*
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
*
நானும் உங்ககூட வரட்டுமா?
*
எப்ப திரும்ப வருவீங்க?
*
எங்கே சாப்பிடுவீங்க?
*
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
*
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
*
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
*
பதில் சொல்லுங்க ஏன்?
*
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
*
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
*
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
*
ஏன் பேசமா இருக்கீங்க?
*
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
*
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
*
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
*
இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா
நினைக்கிறீங்க???

                                                           லண்டனில் இருந்து சிறீ.

சந்தோஷத் தம்பதிகள்...

  • திருமணம் என்பது மனிதர்கள் இளைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும்

     கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்றால் அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இறுகச் செய்யும் சாதனமாகும்.

     தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது

     உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது

     குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் கடமை என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவியின் கடமையாகும்.

     தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

                                                 லண்டனில் இருந்து சிறீ.